ADDED : ஜூன் 17, 2024 12:23 AM

தொண்டி: தொண்டி கடற்கரை நான்காவது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் 100 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றி நிறுவப்பட்டது.
தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு துவக்கி வைத்தார்.
மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி, உதவிபொறியாளர் தமிழ்செல்வன், கவுன்சிலர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். புதுக்குடி, மீனவர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயனடைவார்கள்.