/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அவசியம்; கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அவசியம்; கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அவசியம்; கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அவசியம்; கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அவசியம்; கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2024 12:24 AM
சிக்கல் : -சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பாடத்திட்டம் அமைக்க பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ளது. தலைமையாசிரியர் உட்பட 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
சிக்கல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
பிளஸ் 1, 2 வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாம் குரூப் பாடத்திட்டம் மட்டுமே உள்ளது.
ஆர்ட்ஸ் குரூப் இல்லை. முதல் குரூப்பில் தமிழ் மற்றும் ஆங்கில வழி உள்ளது.
இரண்டாவது குரூப்பில் தமிழ் வழி மட்டுமே உள்ளது.
எனவே பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆர்ட்ஸ் குரூப் பாடத்திட்டத்தை வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.