/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி பூட்டியுள்ள கழிப்பறைகள்; பயணிகள் பாதிப்பு பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி பூட்டியுள்ள கழிப்பறைகள்; பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி பூட்டியுள்ள கழிப்பறைகள்; பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி பூட்டியுள்ள கழிப்பறைகள்; பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பின்றி பூட்டியுள்ள கழிப்பறைகள்; பயணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 17, 2024 12:23 AM

கீழக்கரை: ஏர்வாடியில் தர்கா பின்புறம் உள்ள பகுதியில் பஸ் ஸ்டாண்ட் தொடர் பராமரிப்பு இல்லாமல் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. கழிப்பறை பூட்டியுள்தால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஏர்வாடி பஸ் ஸ்டாண்ட் கடந்த 2007ல் ரூ.65 லட்சத்து 50 ஆயிரத்தில் அமைக்கப்பட்டது. தொடர் பராமரிப்பு இன்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஏர்வாடி தர்காவிற்கு வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்டின் வழியாக செல்கிறது.
ஆனால் பஸ் ஸ்டாண்ட் எவ்வித பராமரிப்புமின்றி குப்பை நிறைந்து காணப்படுகிறது. சீமை கருவேல மரங்கள் பஸ் நிறுத்தும் இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது.பஸ் ஸ்டாண்டின் கூரை பூச்சு பெயர்ந்து உதிர்ந்து விழுகிறது. இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
பஸ் ஸ்டாண்டில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிப்பறை வசதி இருந்தும் தண்ணீர் இல்லாததால் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
எனவே கடலாடி யூனியன் அலுவலர்கள் மற்றும் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்டை துாய்மை செய்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.