/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பர்சால் பணம் இழப்பு ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பர்சால் பணம் இழப்பு
ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பர்சால் பணம் இழப்பு
ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பர்சால் பணம் இழப்பு
ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பர்சால் பணம் இழப்பு
ADDED : ஜூன் 20, 2024 04:28 AM
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை அருகில் உள்ள ஏ.டி.எம்.,ல் பர்சை தவறவிட்டவரின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பணத்தை திருடியுள்ளார்.
பரமக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் காந்தி சிலை பகுதியில் டாடா ஏ.டி.எம்., மிஷினில் நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பணம் நிரப்ப சென்றார். அப்போது தனது பர்சை மறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில் 11:25 மணிக்கு இளைஞர் ஒருவர் ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது மிஷின் மீது இருந்த பர்ஸை திறந்து பார்த்த போது ரூ.3000 பணத்தை எடுத்துச் சென்றார். மேலும் அதில் இருந்த இரண்டு வங்கி ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி உள்ளார்.
பர்சில் கிருஷ்ணமூர்த்தியின் ஆதார் கார்டுகள் இருந்துள்ளது.
இதன் அடிப்படையில் அவரது பிறந்த தேதியை பயன்படுத்தி ஏ.டி.எம்., கார்டில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளளார்.
கிருஷ்ணமூர்த்தி புகாரில் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் இளைஞரை பரமக்குடி போலீசார் தேடுகின்றனர்.