ADDED : ஜூன் 20, 2024 04:27 AM
கமுதி: கமுதி அருகே பேரையூரில் சேதுசீமை இயற்கை விவசாய பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.
விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து விளக்கினார். இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் விவசாயிகளின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு உட்பட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.