/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பராமரிப்பு, தகுதி சான்று பிரிவை மூட முடிவு ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பராமரிப்பு, தகுதி சான்று பிரிவை மூட முடிவு
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பராமரிப்பு, தகுதி சான்று பிரிவை மூட முடிவு
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பராமரிப்பு, தகுதி சான்று பிரிவை மூட முடிவு
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பராமரிப்பு, தகுதி சான்று பிரிவை மூட முடிவு
ADDED : ஜூன் 22, 2024 04:52 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் செயல்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தகுதிச் சான்று பிரிவை மூடிவிட்டு தேவகோட்டைக்கு மாற்றுவதற்கு சி.ஐ.டி.யு., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் கும்பகோணம் கோட்டம் காரைக்குடி மண்டலத்தில் கமுதி, முதுகுளத்துார் கிளைகளில் தலா 50 பஸ்கள், பரமக்குடியில் 75 பஸ்கள், ராமநாதபுரம் புறநகர் கிளையில் 68, நகர் கிளையில் 55, ராமேஸ்வரத்தில் 55 பஸ்கள் என 353 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் அனைத்தும் ராமநாதபுரம் பராமரிப்பு பிரிவில் ஆண்டு தோறும் பராமரிப்பு செய்யப்பட்டு தகுதிச் சான்று பெறுவதற்காக ராமநாதபுரம், பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு சான்றுகள் பெறப்பட்டு இயக்கப்படுகின்றன. தற்போது பராமரிப்பு மற்றும் தகுதி சான்று பிரிவு தேவகோட்டையுடன் இணைக்கப்படவுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து பஸ்கள் அனைத்தும் பராமரிப்பு, தகுதி சான்று பணிக்காக தேவகோட்டைக்கு செல்லும் நிலை ஏற்படும். இது தேவையற்ற அலைச்சல், வீண் செலவை ஏற்படுத்தும்.
பணியாளர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் நிலையில் பராமரிப்பு பணிகளை செய்ய சிரமம் ஏற்படும். எனவே ராமநாதபுரத்தில் இயங்கி வரும் பராமரிப்பு மற்றும் தகுதி சான்று பிரிவை தேவகோட்டைக்கு மாற்றக்கூடாது என்று சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர், போக்குவரத்து மேலாண் இயக்குனருக்கும் மனு அனுப்பியுள்ளார்.