/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை
திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 04:52 AM
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தோரண அலங்கார நுழைவு வாயில் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. நாள்தோறும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமரை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ.,ல் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தெற்கு பகுதியில் சாலை பிரிந்து செல்கிறது. அவ்விடத்தில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் விளம்பரப் பலகையும் வைக்கப்படவில்லை.
வெளியூர் பக்தர்கள் கூறியதாவது: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலின் அலங்கார தோரண நுழைவாயில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அமைக்கப்பட வேண்டும். இதனால் அனைவருக்கும் கோயிலுக்கு செல்வதற்கான வழி தெரியும். எனவே ஹிந்து சமய அறநிலையத் துறையினர் கோயிலுக்கான அலங்கார தோரண நுழைவு வாயில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.