/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஐந்து சோலார் பேனல் பேட்டரிகள் திருட்டு ஐந்து சோலார் பேனல் பேட்டரிகள் திருட்டு
ஐந்து சோலார் பேனல் பேட்டரிகள் திருட்டு
ஐந்து சோலார் பேனல் பேட்டரிகள் திருட்டு
ஐந்து சோலார் பேனல் பேட்டரிகள் திருட்டு
ADDED : ஜூலை 13, 2024 04:39 AM

திருப்புல்லாணி, : திருப்புல்லாணி அருகே அச்சடிபிரம்பு கிழக்கு கடற்கரை சாலை பிரதான பகுதியில் எச்சரிக்கை குறித்த சிக்னல்களை சேதப்படுத்தி அவற்றில் உள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
திருப்புல்லாணி அருகே அச்சடிபிரபு ஐந்திணை பூங்கா நுழைவு வாயில் பகுதி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ளது.
அவ்விடத்தில் அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், முன்னால் மற்றும் பின்னால் வரக்கூடிய வாகனங்களுக்கு எல்.இ.டி., பல்புகளால் ஒளிரக்கூடிய எச்சரிக்கை சிக்னல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சிக்னலின் மேற்புறத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் அப்பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் ஐந்து சிக்னல் கம்பங்களை சேதப்படுத்தியும் ரோட்டோரத்தில் சோலார் பேனல்களோடு சாய்த்தும் வைத்துள்ளனர். அவற்றில் பொருத்தப்பட்டிருந்த தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 5 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர்.
இதனால் இரவு நேரங்களில் ரோட்டை கடக்கும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வது தொடர்கிறது. விபத்து ஏற்படும் இடங்கள் அடையாளம் காட்டப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஹைவே பெட்ரோல் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொண்டு பொது சொத்துக்களை திருடி சேதப்படுத்துவோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.