/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 13, 2024 04:38 AM
கமுதி, : -கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் துவக்க விழா ஜூலை 5ல் யாகசாலை பூஜைகள் யஜமான ஸங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தனபூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, பிரவேச பலி தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் முதற்கால யாக பூஜை, தீபாரதனை பாவனாபிஷேகம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் காலயாக பூஜை, 96 வகை மூலிகைகள், பழங்கள் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 4:00 மணிக்கு எட்டாம் கால யாக பூஜைகள் தீபாராதனை கடம் புறப்பாட்டுக்கு பின் மேல் விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானத்திற்கு திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ ராஜா பட்டர் குருக்கள் தலைமையில் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழா கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மக்கள் பலரும் கலந்து கொண்டனர். கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்ட் செய்தனர்.