முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏனாதி தேவர்புரம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் கழித்து மண்டல பூஜை நடந்தது. காலை கணபதி ஹோமம் துவங்கி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
விநாயகருக்கு பால், சந்தனம், இளநீர் உட்பட 21 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஏனாதி தேவர்புரம் கிராம மக்கள் செய்தனர்.