ADDED : ஜூலை 05, 2024 04:28 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே வெங்கிட்டன்குறிச்சி கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க திட்டத்தில் வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழக அரசு திட்டங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்தல் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது.
வட்டார வேளாண் அலுவலர் ஆர்த்தி முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் விதைக்கு 50 சதவீதம் மானியம் மற்றும் மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம், உயிர் உரங்கள் பயன்பாடு பற்றி பேசினார்.
விதைச் சான்று அலுவலர் வீரபாண்டியன் விதை நேர்த்தி குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண் அலுவலர் சக்தி மோகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சிவகுமார், தங்கவேல் செய்திருந்தனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.