டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு
டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு
டால்பின் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 12, 2025 01:04 AM
தேவிபட்டினம்; தேவிபட்டினம், மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் வனத்துறை சார்பில் டால்பின் பாதுகாப்பு திட்டத்தில், கூட்டு ரோந்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான டால்பின், கடல் குதிரைகள், கடல் பசு உள்ளிட்டவைகளை மீனவர்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு முகாமில், வனத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் கலந்து கொண்டனர்.