திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் உள்ள சக்திவேல் முருகன் கோயிலில் பாலாலயம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததால் அதனை முன்னிட்டு கோயிலில் திருப்பணிகள் புதிதாக துவங்குவதற்காக மூலவர் சக்திவேல் முருகன் முன்பு யாக வேள்விகள் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.