/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்
ADDED : ஜூலை 17, 2024 06:37 AM

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 17 ) காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்ய உள்ளார்.
இதற்காக நேற்றிரவு 8:00 மணிக்கு ராமேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்திற்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்தார். அவருக்கு மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.
இன்று காலை 10:00 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்கிறார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிறகு காஞ்சி மடத்தில் அவர் ஓய்வெடுக்கிறார். மாலை 5:00 மணிக்கு காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார்.