/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடி ஏற்றம் தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடி ஏற்றம்
தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடி ஏற்றம்
தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடி ஏற்றம்
தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடி ஏற்றம்
ADDED : ஜூலை 17, 2024 12:46 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று மாலை புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தங்கச்சிமடம் வேர்க்கோடு கிராமத்தில் உள்ள பழமையான புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி நேற்று சர்ச் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் புனித சந்தியாகப்பர் உருவம் பதித்த கொடியை பாதிரியார்கள் ஆரோக்கிய ராஜா, செபஸ்தியான் ஏற்றி வைத்து விழாவை துவக்கினார்கள்.
ஜூலை 24ல் சந்தியாகப்பர் தேர் பவனி, திருவிழா திருப்பலி பூஜை நடக்கிறது. இன்று (ஜூலை 17) முதல்ஜூலை 25 வரை சர்ச் வளாகத்தில் நற்கருணை ஆராதனை திருப்பலி பூஜை நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக் குழு தலைவர் அருள்தாஸ் தலைமையில் தண்ணீர்ஊற்று, அக்காள்மடம், அரியாங்குண்டு, செம்மமடம், ஓலைக்குடா, வேர்க்கோடு ஆகிய கிராமத்தின் இறைமக்கள் செய்து வருகின்றனர்.