/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் கட்டப்படாத வாறுகால்களால் ஆபத்து; பணிகள் துவங்குவது எப்போது பரமக்குடியில் கட்டப்படாத வாறுகால்களால் ஆபத்து; பணிகள் துவங்குவது எப்போது
பரமக்குடியில் கட்டப்படாத வாறுகால்களால் ஆபத்து; பணிகள் துவங்குவது எப்போது
பரமக்குடியில் கட்டப்படாத வாறுகால்களால் ஆபத்து; பணிகள் துவங்குவது எப்போது
பரமக்குடியில் கட்டப்படாத வாறுகால்களால் ஆபத்து; பணிகள் துவங்குவது எப்போது
ADDED : ஜூன் 18, 2024 06:09 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாறுகால்கள் கட்டப்படாமல் உள்ளதால் ரோட்டில் செல்வோருக்கு ஆபத்தான நிலை உள்ளது.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் கல் தளம் சீரமைப்பு, சிமென்ட் ரோடு மற்றும் தார் ரோடு பணிகள் நடக்கிறது. இந்நிலையில் ரோடு பணிகள் தொடர்ந்து நடக்கும் சூழலில் வாறுகால் சீரமைப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாறுகால் சுத்தம் செய்யும் பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு அடி முதல் மூன்று அடிக்கு மேல் ஆழமுள்ள வாறுகால்களும் குப்பை, மணல் நிரம்பி காணப்படுகிறது.
சுத்தம் செய்வதற்கு துப்புரவு பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத சூழலில் பல பகுதிகளில் துார்ந்து போய் உள்ளது. இச்சூழலில் பல்வேறு தெருக்களில் வாறுகால் முறையாக கட்டப்படாமல் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்திற்கும் இடையூறாகியுள்ளது.
இதனால் மழை நேரங்களில் ஆபத்தான பள்ளங்களில் பள்ளி குழந்தைகள் உட்பட ரோட்டில் செல்லும் வாகனங்கள் பாதசாரிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதேபோல் குறிப்பிட்ட பகுதிகளில் வாறுகால் சீரமைப்பு செய்யப்பட்டாலும் முறையாக கட்டப்படாமல் இருக்கிறது.
எனவே ரோடு அமைப்பதில் கவனம் செலுத்தும் அதிகாரிகள் வாறுகால் சீரமைப்பையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.