/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி அருகே பராமரிப்பின்றி சூடியூர் ரயில்வே ஸ்டேஷன் பரமக்குடி அருகே பராமரிப்பின்றி சூடியூர் ரயில்வே ஸ்டேஷன்
பரமக்குடி அருகே பராமரிப்பின்றி சூடியூர் ரயில்வே ஸ்டேஷன்
பரமக்குடி அருகே பராமரிப்பின்றி சூடியூர் ரயில்வே ஸ்டேஷன்
பரமக்குடி அருகே பராமரிப்பின்றி சூடியூர் ரயில்வே ஸ்டேஷன்
ADDED : ஜூன் 18, 2024 06:04 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே சூடியூர் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு இல்லாத நிலையில் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் பரமக்குடியை அடுத்து சூடியூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு மதுரை- ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம்- மதுரை செல்லும் பயணிகள் ரயில் நின்று செல்கிறது.
இந்த ஸ்டேஷனில் பல மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நடைமேடை உயர்த்தி அமைக்கப்பட்டது. தொடர்ந்து பிளாட்பாரங்கள் அமைக்கப்படாமல் கல் மற்றும் மணல் வெளியாகவே இருக்கிறது.
இந்நிலையில் ரயில்கள் கிராசிங் ஆகும் நிலையில் இரண்டு பிளாட்பாரங்களில் நிறுத்தும் சூழல் நிலவுகிறது. அப்போது பயணிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் இங்குள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இந்த ஸ்டேஷனில் பெரும்பாலும் பணிக்கு செல்லும் மக்கள் ஏறி இறங்குகின்றனர். ஆகவே பயணிகளின் நிலை கருதி ரயில்வே நிர்வாகம் ஸ்டேஷனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.