Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய மின் மீட்டர் பொருத்துவதாக  கூறி பணம் வசூல்: மக்களே உஷார்

புதிய மின் மீட்டர் பொருத்துவதாக  கூறி பணம் வசூல்: மக்களே உஷார்

புதிய மின் மீட்டர் பொருத்துவதாக  கூறி பணம் வசூல்: மக்களே உஷார்

புதிய மின் மீட்டர் பொருத்துவதாக  கூறி பணம் வசூல்: மக்களே உஷார்

ADDED : ஜூலை 12, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் மின்வாரியத்திற்கு தொடர்பு இல்லாத சிலர் மின் மீட்டர் பொருத்துவதாக கூறி பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்விஷயத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிருஷ்ணாநகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 50 வயதுள்ள மர்மநபர் மின்வாரியத்தில் இருந்து வருவதாக கூறியுள்ளார். உங்கள் வீட்டு மாடிக்கு புதிதாக மின்மீட்டர் வந்துள்ளது எனக்கூறிவிட்டு அதனை பொருத்தியுள்ளார்.

அதற்கு கட்டணமாக ரூ.5000 பெற்றுக்கொண்டார். அதன் பிறகு அப்பெண் தனது மகனிடம் விசாரித்த போது புதிய மீட்டர் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பதும், யாரோ மின்வாரியத்தின் பெயரில் மின் மீட்டர் பொருத்தி ஏமாற்றியதும் தெரிய வந்தது. மர்ம நபர் வந்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகியுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் உஷராக இருக்க வேண்டும். புதிய மின்மீட்டர் குறித்து அவர்களது அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., வரும். ஆன்-லைனில் தான் பணம் செலுத்த வேண்டும். விபரம் தெரியாத மக்களிடம் சிலர் மின்மீட்டர் பொருத்துவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றுகின்றனர். அவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us