Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 3,800 கி.மீ., படுத்தபடி ராமேஸ்வரம் வந்த சாது

3,800 கி.மீ., படுத்தபடி ராமேஸ்வரம் வந்த சாது

3,800 கி.மீ., படுத்தபடி ராமேஸ்வரம் வந்த சாது

3,800 கி.மீ., படுத்தபடி ராமேஸ்வரம் வந்த சாது

ADDED : ஜூலை 12, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்:உத்தரகாண்ட் மாநிலம், கங்கோத்ரியை சேர்ந்தவர் சுவாமி ராஜ்கிரி மகராஜ், 52. சாதுவான இவர் ஸ்ரீ ராமர் பூஜித்து தரிசித்த தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதற்காக, 2023 ஏப்., 14ல் கங்கோத்ரியில் இருந்து படுத்து கும்பிட்டபடி தன் யாத்திரையை துவக்கினார்.

உ.பி., மஹாராஷ்டிரா, கர்நாடகா வழியாக, 3,800 கி.மீ., கடந்து, நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். தினமும் 5 -- 10 கி.மீ., மட்டும் படுத்து கும்பிட்டபடி வந்துள்ளார். இவருக்கு உதவியாக இருவர் உள்ளனர். சுவாமி ராஜ்கிரி மகராஜ் கூறுகையில், “ஸ்ரீ ராமர் அயோத்தியில் இருந்து வனவாசமாக ராமேஸ்வரம் வந்தார். அவர் பதித்த கால் தடத்தில் என் கால் தடம் படக்கூடாது என்பதற்காக படுத்து கும்பிட்டபடி வந்து சிவபெருமானை தரிசிக்க உள்ளேன். இதன் வாயிலாக எனக்கு பெரும் புண்ணியம் கிடைத்தது,” என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us