/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாடகை கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம்
வாடகை கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம்
வாடகை கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம்
வாடகை கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம்
ADDED : ஜூலை 13, 2024 04:17 AM
கமுதி : கமுதி அருகே அபிராமத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கமுதி அருகே அபிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழைய ஓட்டு கட்டடத்தில் பல ஆண்டுகளாக சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
முறையான பராமரிப்பின்றி கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலைக்கு மாறியது.
இதையடுத்து கமுதி ரோடு அபிராமம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் தனியார் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு அபிராமம் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வருகின்றனர்.
இங்கு போதுமான இடவசதி இல்லை. குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் பத்திரப்பதிவிற்கு வரும் மக்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தனியார் கட்டடத்தில் செயல்படுவதால் அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது.
எனவே மக்களின் நலன் கருதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.