/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அப்துல் கலாம் படித்த பள்ளி நுாற்றாண்டு விழா அப்துல் கலாம் படித்த பள்ளி நுாற்றாண்டு விழா
அப்துல் கலாம் படித்த பள்ளி நுாற்றாண்டு விழா
அப்துல் கலாம் படித்த பள்ளி நுாற்றாண்டு விழா
அப்துல் கலாம் படித்த பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 12, 2025 01:06 AM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசையாக நடந்தது.
ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண் 1ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்தார். இப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் நடந்தது.
ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜமனோகரன், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், முன்னாள் மாணவர்கள் களஞ்சியம், பொறியாளர் முருகன், நாகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, அப்துல் கலாம் பேரன் ேஷக்சலீம், மண்டபம் வட்டார கல்வி அலுவலர் மீனாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.