/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எஸ்.பி., அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் தற்கொலை எஸ்.பி., அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் தற்கொலை
எஸ்.பி., அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் தற்கொலை
எஸ்.பி., அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் தற்கொலை
எஸ்.பி., அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் தற்கொலை
ADDED : மார் 12, 2025 01:08 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன்பு போலீசாரை கண்டித்து தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேதுமாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
தங்கச்சிமடம் பகுதி ஆட்டோ டிரைவர் சேதுமாணிக்கம் 70. நேற்று முன்தினம் தங்கச்சிமடம் என்.எஸ்.கே., வீதியில் ஆட்டோ ஓட்டி சென்ற போது அதே பகுதியை சேர்ந்த பாபா முருகன் மீது லேசாக மோதினார்.
பாபா முருகன் உட்பட சிலர் சேதுமாணிக்கத்திடம் தகராறு செய்து தாக்கினர். சேதுமாணிக்கம் ராமேஸ்வரம் துறைமுகம் போலீசில் புகார் அளித்தார். பாபா முருகனும் சேதுமாணிக்கம் மீது புகார் அளித்தார்.
சேதுமாணிக்கம் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தன்னை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன்பு நேற்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.------