Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜீவன் ரக்சஷா விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ஜீவன் ரக்சஷா விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ஜீவன் ரக்சஷா விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ஜீவன் ரக்சஷா விருதுபெற விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 03, 2024 02:43 AM


Google News
ராமநாதபுரம்: மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்சஷா பதக்க விருதுகள் வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் ”ஜீவன் ரக்சஷா பதக்க விருதுகள்” வழங்குகிறது.

அதன்படி 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுள்ள நபர்கள் http://awards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்-லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 28 மாலை 4:00 மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us