/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரி உணவு திருவிழா கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரி உணவு திருவிழா
கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரி உணவு திருவிழா
கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரி உணவு திருவிழா
கற்பக விநாயகர் பி.எட்., கல்லுாரி உணவு திருவிழா
ADDED : ஜூன் 03, 2024 02:43 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி ஸ்ரீ கற்பக விநாயகர் பி எட்., கல்லுாரியில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா நடந்தது.
கல்லுாரி சேர்மன் முருகானந்தம் தலைமை வகித்தார். பொருளாளர் நவநீதக்கண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
விழாவில் மாணவர்கள் மண் சட்டிகளில் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்தனர்.
மேலும் வாழை இலை, பனை ஓலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி குளிர்பானங்கள் முதல் அனைத்து வகை உணவுகளையும் செய்து வைத்திருந்தனர்.
சிறந்த உணவு வகைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.