/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் வேளாண் பணிகள் - கலெக்டர் ஆய்வு பரமக்குடியில் வேளாண் பணிகள் - கலெக்டர் ஆய்வு
பரமக்குடியில் வேளாண் பணிகள் - கலெக்டர் ஆய்வு
பரமக்குடியில் வேளாண் பணிகள் - கலெக்டர் ஆய்வு
பரமக்குடியில் வேளாண் பணிகள் - கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 10, 2024 11:12 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே கீழப்பருத்தியூர், புலவர் வேலங்குடி கிராமங்களில் பல்வேறு பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.
கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு தேவையான பணிகளை தேர்வு செய்து நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். ரோடு, பஸ் மற்றும் குடிநீர் வசதி என அத்தியாவசிய தேவைகள் செயல்படுத்தப்படும் என கலெக்டர் கூறினார்.
புலவர் வேலங்குடி மயானத்தில் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் காத்திருப்போர் கூடம், பரமக்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏலக்கூடம், ஆய்வகம், விவசாயிகள் ஓய்வு அறை மற்றும் 1000 டன் கிடங்கில் இ-நாம் திட்டத்தில் விவசாயிகளால் கொண்டு வந்த மிளகாய் வத்தல் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல், குதிரைவாலி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
நாப்கின் தயாரிக்கும் கடை மற்றும் தரம் பிரிப்பு கூடத்தில் பரம்பை உழவர் உற்பத்தியாளர் தயாரிக்கும் உணவு பொருட்களை ஆய்வு செய்தார். பரமக்குடி பி.டி.ஓ., க்கள் கருப்பையா, தேவபிரியதர்ஷினி, இன்ஜினியர் ஈஸ்வரன் பங்கேற்றனர்.