ADDED : ஜூன் 10, 2024 11:13 PM
திருவாடானை : திருவாடானை அருகே என்.மங்கலத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது.
திருவாடானை தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் சென்று தீப்பந்தம் பயன்படுத்தி விஷ வண்டுகளை அழித்தனர்.