கடலாடி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தவர்களிடம் அந்தந்த உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தனியாக கமிஷன் வசூல் செய்து வரும் நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் கேட்கின்றனர்.
இதனால் எல்லா தகுதியும் உள்ள தகுதியுள்ளவர்களுக்கு வீடு பெறுவதில் பல ஆண்டுகளாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் வேண்டப்பட்டவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், இதில் மோசடிகள் நடைபெறுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தேர்வு செய்யப்பட்டு மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர்களை தெரிந்து கொண்டு கமிஷன் கேட்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
கடலாடி கிராம ஊராட்சி பி.டி.ஓ., ஜெயஆனந்த் கூறுகையில், பயன்பெறும் நபர்களின் பெயர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.