/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நினைவகத்தில் அஞ்சலி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நினைவகத்தில் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நினைவகத்தில் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நினைவகத்தில் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நினைவகத்தில் அஞ்சலி
ADDED : ஜூலை 28, 2024 04:32 AM

ராமேஸ்வரம், : முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அவரது நினைவிடத்தில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2015 ஜூலை 27ல் மேகாலயா ஷில்லாங்கில் உயிரிழந்தார். அவரது தேசிய நினைவகம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் பராமரித்து வருகிறது.
நேற்று அப்துல் கலாம் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது நினைவிடத்தில் பா.ஜ., தேசிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஜமால் சித்திக், செயலாளர் வேலுார் இப்ராஹிம், தமிழக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி, கலாம் உறவினர்கள் ேஷக் சலீம், ேஷக் தாவூத், நஜீமா மரைக்காயர், ஜெயினுலாபுதீன், பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத் நிர்வாகிகள் துவா பிரார்த்தனை செய்தனர்.
பின் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து தமிழக அமைச்சர் மெய்யநாதன், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உட்பட ஏராளமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விதைப்பந்து, பரிசுகள் வழங்கப்பட்டது.