Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ ஸ்கேன் செய்து சிசுவின் பாலினம் சொல்லும் கும்பல் சுற்றி வளைப்பு 

ஸ்கேன் செய்து சிசுவின் பாலினம் சொல்லும் கும்பல் சுற்றி வளைப்பு 

ஸ்கேன் செய்து சிசுவின் பாலினம் சொல்லும் கும்பல் சுற்றி வளைப்பு 

ஸ்கேன் செய்து சிசுவின் பாலினம் சொல்லும் கும்பல் சுற்றி வளைப்பு 

ADDED : ஜூலை 26, 2024 01:38 AM


Google News
பெரம்பலுார்:தர்மபுரி மாவட்டத்தில், ஒரு கும்பல் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லி வருவதாகவும், அக்கும்பல் 'மொபைல் டீம்' போல் செயல்படுவதாகவும் அந்த மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்திக்கு புகார் வந்தது.

இந்நிலையில், அந்த கும்பல், காரில் கர்ப்பிணிகளை அழைத்து செல்வதாக நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காரை மருத்துவத்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்றபோது, பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் இயங்கும் எம்.ஜி., மெடிக்கல்ஸ் எனும் ஆங்கில மருந்து கடைக்கு சென்றது.

அந்த மருந்து கடைக்குள் கர்ப்பிணிகளை அழைத்து சென்ற அந்த கும்பல், கையடக்க ஸ்கேன் வாயிலாக இருக்கும் பாலினத்தை கண்டறியும் பரிசோதனையில் ஈடுபட்டபோது, மருத்துவ அதிகாரிகள், கும்பலை சுற்றி வளைத்தனர்

விசாரணையில், கடலுார் மாவட்டம், கட்சிமேளூரை சேர்ந்த முருகன், 55, என்பவர், இந்த பரிசோதனைக்கு 16,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்வது தெரிந்தது. கர்ப்பிணிகளிடம் விசாரித்ததில், அவர்கள் நான்கு பேருக்கும் தலா இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது.

புகாரின்படி, மருவத்துார் போலீசார், முருகனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us