ADDED : ஜூலை 26, 2024 09:20 PM
பெரம்பலுார்:நிலுவையில் உள்ள 7 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ள நிலையில் தினமும் வகுப்பறையில் அமர்ந்து சென்ற நிலையில் நேற்று மாணவர்கள் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை வலியுறுத்தி நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.