Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அரசு பஸ்சில் சுவாமி படங்கள் அகற்றம் நாள்தோறும் செல்லும் பயணியர் அதிர்ச்சி

அரசு பஸ்சில் சுவாமி படங்கள் அகற்றம் நாள்தோறும் செல்லும் பயணியர் அதிர்ச்சி

அரசு பஸ்சில் சுவாமி படங்கள் அகற்றம் நாள்தோறும் செல்லும் பயணியர் அதிர்ச்சி

அரசு பஸ்சில் சுவாமி படங்கள் அகற்றம் நாள்தோறும் செல்லும் பயணியர் அதிர்ச்சி

ADDED : ஜன 25, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் அரசு போக்கு வரத்து கிளையின் கீழ் இயக்கப்படும், ஊட்டி - திருச்சி வழித்தட அரசு பஸ், கடந்த ஆட்சி காலத்தில், டிரைவர், கண்டக்டரால் பொலிவு படுத்தி இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் பயணம் செய்ய பயணியர் ஆர்வம் காட்டினர்.

சில நாட்களுக்கு முன் இந்த வழித்தடத்திற்கு புதிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த காலங்களை போல, கண்டக்டர், டிரைவர்கள் தங்களது சொந்த செலவில், மூன்று மதங்களை வணங்கும் வகையில் ஆன்மிக படங்களை உட்புறம் வைத்தும், பஸ்சின் பின்புறம் முனீஸ்வரர் படமும் வைத்தனர். இயற்கை காட்சிகளையும் வரைந்து தனியார் பஸ்களை போல அசத்தினர்.

இந்நிலையில், சுவாமி படங்கள் உட்பட அனைத்து ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டன. இதனால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனிடம் கேட்டபோது நேரடி பதில் தராமல் தவிர்த்தார்.

''அனுமதியின்றி விளம்பரங்கள் இருந்தன. அரசு பஸ்களில் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்படும். பின் தான் விளம்பரம் செய்ய வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us