/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை; இரவில் வரும் ரேசன் பொருட்கள் குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை; இரவில் வரும் ரேசன் பொருட்கள்
குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை; இரவில் வரும் ரேசன் பொருட்கள்
குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை; இரவில் வரும் ரேசன் பொருட்கள்
குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை; இரவில் வரும் ரேசன் பொருட்கள்
ADDED : ஜூன் 12, 2025 09:44 PM

கூடலுார்; கூடலுார் 'சிவில் சப்ளை' குடோனில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, பொருட்களை, வாகனங்களில் ஏற்றி, இரவில் ரேசன் கடைகளுக்கு கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், 63 ரேசன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளிலிருந்து, 42 ஆயிரம் குடும்ப அட்டைக்காரர்கள் ரேசன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
ரேசன் கடைகளுக்கு, கூடலுார் சிவில் சப்ளை (நுகர் பொருள் வாணிப கழகம்) குடோனிலிருந்து பொருட்கள் அனுப்பி வைக்கின்றனர்.
முன்பு ரேசன் பொருட்களை, மாலையில் கடையின் வேலை நேரம் முடியும் முன் சப்ளை செய்து வந்தனர்.
தற்போது, குடோனில் பொருட்களை வாகனங்களில் ஏற்ற ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, ரேசன் பொருட்களை, வாகனங்களில் ஏற்றி, கடைக்கு கொண்டு சென்று சேர்க்க இரவு ஆகிறது.
பல கடைகள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள தால் இரவில் பொருட்களை இறக்குவதில் ஆபத்து உள்ளது.
பொது மக்கள் கூறுகையில்,'இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பொருட்களை வாகனங்களில் ஏற்றும் பணிக்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க வேண்டும்,' என்றனர்.