/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரவில் நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அச்சம் இரவில் நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அச்சம்
இரவில் நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அச்சம்
இரவில் நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அச்சம்
இரவில் நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அச்சம்
ADDED : ஜூன் 12, 2025 09:45 PM
குன்னுார்; குன்னுார் தொடர்ந்து, இரவு நேரங்களில் நாய்களை வேட்டையாடி செல்லும் சிறுத்தையால், மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் நாய் மற்றும் கால்நடைகளை வேட்டையாட, சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இப்பகுதிக்கு வந்த சிறுத்தை, வீட்டில் இருந்த, வளர்ப்பு நாயை அடித்து கவ்வி சென்றது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த இளையராஜா கூறுகையில்,''சிறுத்தை இதுவரை,10 நாய்களை வேட்டையாடி சென்றுள்ளது. ஏற்கனவே கிராமசபை கூட்டங்களிலும் இது தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.