/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம் 'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்
'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்
'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்
'ரெட் அலர்ட்': 30 இடங்களில் தற்காலிக முகாம்
ADDED : ஜூன் 13, 2025 09:26 PM
கூடலுார்; நீலகிரிக்கு, இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடலுாரில், 30 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீலகிரிக்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள, கூடலுார் வருவாய் துறையினர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாசில்தார் முத்துமாரி கூறுகையில், ''கூடலுார் தாலுகா பகுதியில், அதிகனமழையை கண்காணிக்க இரண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்காக, 30 இடங்களில், தற்காலிக முகாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என்றனர்.