/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ் ஸ்டாண்ட் வளாக சீரமைப்பு பணி துவக்கம்; பருவ மழை தீவிரமடைவதற்குள் பணி முடிந்தால் பயன் பஸ் ஸ்டாண்ட் வளாக சீரமைப்பு பணி துவக்கம்; பருவ மழை தீவிரமடைவதற்குள் பணி முடிந்தால் பயன்
பஸ் ஸ்டாண்ட் வளாக சீரமைப்பு பணி துவக்கம்; பருவ மழை தீவிரமடைவதற்குள் பணி முடிந்தால் பயன்
பஸ் ஸ்டாண்ட் வளாக சீரமைப்பு பணி துவக்கம்; பருவ மழை தீவிரமடைவதற்குள் பணி முடிந்தால் பயன்
பஸ் ஸ்டாண்ட் வளாக சீரமைப்பு பணி துவக்கம்; பருவ மழை தீவிரமடைவதற்குள் பணி முடிந்தால் பயன்
UPDATED : ஜூன் 13, 2025 11:26 PM
ADDED : ஜூன் 13, 2025 09:24 PM

கூடலுார்; 'கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தின் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய புதிய பஸ் பகுதியில் உள்ள பழைய ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
இதன், முன் பகுதி வளாகம் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு பிப்., மாதம் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்புற பகுதி சீரமைக்காமல் இருந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தற்போது, பருவமழை துவங்கிய நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள குழிகளில் மழை நீர் குளம் போல தேங்கியதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தி கடந்த, 31ம் தேதி சமூக ஆர்வலர்கள் சார்பில், பஸ் ஸ்டாண்ட் வளகத்தில் தேங்கியுள்ள மழை நீரில், காகித கப்பல் விட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மேலும், கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.,வை சந்தித்த அதிகாரிகள், 'பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க, 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,' என, உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று, போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. இப்பணிகளை பருவ மழை தீவிரமாவதற்குள் விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டு சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.