Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுாரில் 324 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டம்

குன்னுாரில் 324 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டம்

குன்னுாரில் 324 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டம்

குன்னுாரில் 324 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'; வியாபாரிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டம்

ADDED : ஜூன் 13, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட, முதற்கட்டமாக, 324 கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ் வழங்கியது.

குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாயில் புதிய கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய, வியாபாரிகள் வலியுறுத்திய நிலையில், உழவர் சந்தை அருகே மாற்று கடைகள் அமைக்கப்பட்டன.

'மிகவும் சிறிய கடைகளை அமைத்ததாலும், அங்கு மக்கள் யாரும் வாங்க வர வாய்ப்பில்லை,' என, வியாபாரிகள் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை வியாபாரிகள் புறக்கணித்தனர்.

உழவர் சந்தை பகுதியில் இல்லாமல், நகர பகுதியில் தற்காலிக கடைகளை அமைக்க, ஒட்டுமொத்த கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதற்காக கமிட்டி அமைத்து தீர்வு காண, அதிகாரிகள் ஒப்பு கொண்டனர்.

எனினும், மார்க்கெட் கடைகளை காலி செய்ய முதற்கட்டமாக, 324 கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அப்போது, நோட்டீஸ் வழங்குவதை நிறுத்த கூறி, 6 கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

கமிஷனர் இளம்பரிதியை வரவழைத்த, அ.தி.மு.க.,வினர், 'உழவர் சந்தை இடத்தில் தற்காலிககடைகள் வேண்டாம் என, நகராட்சி கூட்டத்தில் கூறிய பின்பும் நோட்டீஸ் வழங்குவது சரியல்ல, இதனை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்,' என, கூறினர். எனினும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால், வியாபாரிகளுடன் அ.தி.மு.க.,வினர் அங்கு அமர்ந்து போராட்டம் துவக்கினர். பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்தனர். அப்போது, 'காட்டெருமை, கரடி உள்ள வன விலங்குகள் நடமாட்டமுள்ள, உழவர் சந்தை பகுதியில் தற்காலிக கடைகள் வேண்டாம்; இதே இடத்தில் அருகிலேயே மாற்று கடைகளை அமைத்து தாருங்கள்,' என, பெண்கள் கண்ணீர் விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us