/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ---பாஸ் சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ---பாஸ்
சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ---பாஸ்
சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ---பாஸ்
சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ---பாஸ்
ADDED : ஜூன் 13, 2025 09:27 PM

கூடலுார்; முதுமலை, மசினகுடி சோதனை மையத்தில், 'பூம் பேரியர்' பொருத்தி, ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தானியங்கி முறையில் இ--பாஸ் சோதனை மற்றும் நுழைவு வரி கட்டணம் வசூல் பணி துவக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வரும் வாகன எண்ணிக்கையை கண்டறிய, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ--பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டது. விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்.,1 முதல், ஊட்டிக்கு வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில், 8,000 வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை, மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.
அதில், கேரளா, கர்நாடகாவில் இருந்து ஊட்டி உள்ள சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட், தெப்பக்காடு, மசினகுடி சாலையில் செயல்பட்டு வரும் சோதனை மையங்களில், இ--பாஸ் சோதனை செய்த பின்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தானியங்கி முறையில் இ--பாஸ் சோதனை செய்யும் வகையில் 'பூம் பேரியர்' அமைக்கும் பணி மசினகுடியில் நடந்தது வந்தது.
பணிகள் முடிந்து, சுற்றுலா வாகனங்களுக்கு, தானியங்கி முறையில் இ--பாஸ், மற்றும் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் பணி நேற்று துவக்கப்பட்டது.
இதனால், சுற்றுலா வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தி ஊட்டிக்கு செல்வதில் ஏற்பட்ட காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'இவ்வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களின், எண்களை வைத்து, 'பூம் பேரியர்' தானியங்கி முறையில் இ-பாஸ் சோதனை மற்றும், 'பாஸ்டேக்' முறையில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்து, வாகனங்கள் செல்ல வழி ஏற்பட்டுள்ளது.
ஊட்டி தேசியநெடுஞ்சாலை, மேல் கூடலுார் சில்வர் கிளவுட் பகுதியில் இ--பாஸ் சோதனை மையத்திலும் இம்முறையில், சோதனை மற்றும் பசுமை வரி வசூல் செய்யும் பணி விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.