Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம்; ஒப்பந்ததாரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம்; ஒப்பந்ததாரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம்; ஒப்பந்ததாரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம்; ஒப்பந்ததாரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

ADDED : ஜூன் 13, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் எஸ்டேட்டில், ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்றது தொடர்பாக, பிரபல ஒப்பந்ததாரர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலத்தில் உள்ள ஈட்டி மரத்தை காக்க, 1994 ஆம் ஆண்டு தமிழக ஈட்டி மர பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்றியது. 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் மீண்டும்,15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சட்டத்தின்படி, ஈட்டி மரங்களின் இலைகளை கிள்ளினாலே குற்ற செயலாக கருதப்படும் நிலையில், ஈட்டி மரத்தை வெட்டவோ, இதன் அடிப்பகுதியில் காயும் படி பட்டையை உரிக்க கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், பந்தலுார் சேரம்பாடி பகுதியில் தனியார் தோட்டத்தில் ஈட்டி மரங்களை வெட்டி கடத்தும் வகையில், கிளைகளை வெட்டுவதாக புகார் வந்தது. உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

அதில், 18- ஈட்டி மரங்களின் பெரிய கிளைகளை வெட்டி அகற்றி உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, கூடலுார் வன அலுவலர் அறிவுரையின்படி, புல தணிக்கை செய்யப்பட்டு, 'வென்ட்வொர்த்' தனியார் எஸ்டேட் நிர்வாகம், ராஜு கிரியன், இஸ்மாயில், அப்துல் அசிஸ், மீனா, ராயின், நவுசாத், ரசீத் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சம்பவம் தொடர்பாக, பந்தலுார் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ராயின் என்பவர் பிரபல ஒப்பந்ததாரராக உள்ளார்.

வனச்சரகர் அய்யனார் கூறுகையில், ''பாதுகாப்பு பட்டியலில் உள்ள ஈட்டி மரங்களின் கிளைகளை வெட்டி கடத்தும் நடவடிக்கை மேற்கொண்டது குறித்து ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர் விசாரணைக்கு பின்னரே இதன் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us