/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழாராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 10, 2024 11:52 PM
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவை கல்லூரி முதல்வர் உமா துவக்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து கல்லூரிக்கு வந்து இருந்தனர். வண்ணக் கோலங்கள் அழகூட்டப்பட்ட மண்பானையில் பச்சரிசி இட்டு, புத்தம் புதிய மண் அடுப்பில் விறகு வைத்து, தீ மூட்டி பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டனர். விழாவை ஒட்டி அம்மி அரைத்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், சிலம்பாட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கட்டடவியல் துறை தலைவர் நிவேதிதா செய்து இருந்தார்.