/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் மெத்தனம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் காஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் மெத்தனம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
காஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் மெத்தனம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
காஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் மெத்தனம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
காஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் மெத்தனம் மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
ADDED : ஜூன் 06, 2025 10:25 PM
குன்னுார், ; குன்னுார் மேலுார் ஒசட்டி கிராமத்தில், காஸ் சிலிண்டர்கள் முறையாக, வினியோகம் செய்யாததால் மக்கள் திடீர் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், சில கிராமங்களில் காஸ் சிலிண்டர்கள் சரிவர வினியோகம் செய்வதில்லையென மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலுார் ஒசட்டி கிராமத்தில் நீண்ட நாட்கள் காஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சிலிண்டர்கள் கொண்டு வந்த மிளி லாரியை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சிலிண்டர்கள் மீண்டும் கொண்டு வருவதாக ஊழியர்கள் உறுதி அளித்தனர். இதனால் முற்றுகையை கைவிட்டனர். அதன்பின், மீண்டும் கொண்டு வந்து வழங்கினர்.
மக்கள் கூறுகையில்,'மஞ்சூர் பகுதியில் இருந்து பாரத் காஸ் நிறுவனத்தில் இருந்து, காஸ் சிலிண்டர்கள் முறையாக வினியோகம் செய்வதில்லை. கிராமத்தில், 93 பேருக்கு சிலிண்டர் வழங்க வேண்டிய நிலையில், மிகவும் குறைந்த சிலிண்டர்களை கொண்டு வந்தனர். முற்றுகையிட்டதால் சிலிண்டர் மீண்டும் கொண்டு வந்து வழங்கினர். தொடர்ந்து முறையாக சிலிண்டர்கள் வழங்கவிட்டால் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.