/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோத்தகிரி நகராட்சியானதால் பேரூராட்சி தகவல் பலகைகள் அழிப்பு கோத்தகிரி நகராட்சியானதால் பேரூராட்சி தகவல் பலகைகள் அழிப்பு
கோத்தகிரி நகராட்சியானதால் பேரூராட்சி தகவல் பலகைகள் அழிப்பு
கோத்தகிரி நகராட்சியானதால் பேரூராட்சி தகவல் பலகைகள் அழிப்பு
கோத்தகிரி நகராட்சியானதால் பேரூராட்சி தகவல் பலகைகள் அழிப்பு
ADDED : ஜூன் 06, 2025 10:27 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தகவல் பலகைகள் அழிக்கும் பணி நடந்தது.
கோத்தகிரி பேரூராட்சி, மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சி புதிய கமிஷனராக மோகன் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், இதுவரை, பஸ் நிலையம், பயணியர் நிழற்குடை, அரசின் திட்டங்கள் உட்பட, அனைத்திலும் பேரூராட்சி என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு, பேரூராட்சி என்ற வாசகம் அழிக்கப்பட்டு, 'நகராட்சி' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நகராட்சிக்கான கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் விரைவில் மேற்கொள்ள வேண்டும்.