/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வழங்க அறிவுரை 'பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வழங்க அறிவுரை
'பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வழங்க அறிவுரை
'பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வழங்க அறிவுரை
'பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வழங்க அறிவுரை
ADDED : ஜூன் 06, 2025 10:25 PM
குன்னுார்; 'வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட இந்திய குடும்ப நலச்சங்க கிளை சார்பில், உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தின விழா மற்றும் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
சங்க நீலகிரி கிளை மருத்துவர் ஆனந்தவல்லி வகித்து, 'உலக சுற்றுச்சூழல் தின முக்கியத்துவம்; சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களின் விளைவுகள்; மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பு முறைகள்,'குறித்து பேசினார்.
செவிலியர் சத்தியவதி பேசுகையில், ''அன்றாட வாழ்வில் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பெரும்பாலும் தவிர்க்க முன்வர வேண்டும். வீடுகளிலேயே பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து வழங்க வேண்டும். ஆங்காங்கே பிளாஸ்டிக் உட்பட குப்பைகளை வீசாமல், இயற்கையை பாதுகாப்பதற்கு உறு துணையாக இருப்பது அவசியம்,'' என்றார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரம்பாள் வரவேற்றார். ஏற்பாடுகளை சங்க உறுப்பினர்கள் சவுமியா, லோகேஸ்வரி செய்திருந்தனர்.