/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அழியும் ஆரஞ்சு பழ தோட்டங்களை மீட்டெக்க முயற்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி அழியும் ஆரஞ்சு பழ தோட்டங்களை மீட்டெக்க முயற்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி
அழியும் ஆரஞ்சு பழ தோட்டங்களை மீட்டெக்க முயற்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி
அழியும் ஆரஞ்சு பழ தோட்டங்களை மீட்டெக்க முயற்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி
அழியும் ஆரஞ்சு பழ தோட்டங்களை மீட்டெக்க முயற்சி: உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதி
ADDED : ஜூன் 06, 2025 10:24 PM

கோத்தகிரி,; உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரவேனு பகுதியில் ஆரஞ்சு பழத்தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக, காலநிலை மாற்றம் மீட்டெடுக்கும் விதமாக ,ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோத்தகிரி அரவேனு மூணுரோடு பகுதியில், 15 ஆண்டுகளாக அழிவின் பிடியில் உள்ள ஆரஞ்சு பழத்தோட்டங்கள் மீட்டெடுக்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அதன்படி, தனியார் தேயிலை தோட்டத்தில், 500 ஆரஞ்சு மரக்கன்றுகளை மாணவர்கள் நடவு செய்தனர்.
தொடர்ந்து, நடந்த உலக சுற்றுச்சூழல் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க நிர்வாகி சரவணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் மற்றும் அரிமா சங்க தலைவர் ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
கோடை காலங்களில் ஏற்படும் வெப்ப அலைகள் காரணமாக, கடந்த ஆண்டில் உலக அளவில், 25 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மனித உடல், 38 டிகிரி சென்டிகிரேட் வரைதான் வெப்பத்தை தாங்கும் தகுதி உள்ளது. அதற்கு மேல் வெப்பநிலை அதிகரித்தால், மனித உடல் வியர்ப்பை நிறுத்தி விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை கால வெப்பநிலை, 42 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் உள்ளது, 46.7 டிகிரி சென்டி கிரேட் வெப்பநிலையில் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நடத்துவதை நிறுத்தி விடும் என ஆய்களில் தெரியவந்துள்ளது.
காற்று மாசு காரணமாக, டெல்லியை சுற்றி உள்ள, ஆறு நகரங்கள் விசவாயு கேந்திரங்களாக மாறியுள்ளன. 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் மின்சாரம் சூழ்நிலையில் வேலை செய்பவர்களின் ரத்த அழுத்தம், 8 புள்ளிகள் வரை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது. 'பிளாஸ்டிக்கை' தவிர்த்து, பூமியின் பசுமை பரப்பை அதிகரிப்பது மட்டும் இதற்கு தீர்வாக அமையும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், தன்னார்வ அமைப்பினர் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.