/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆக்கிரமிப்பு கடை அதிரடி அகற்றம்... ஆற்றோரத்தில் அபாயம்! பேரிடர் பாதிப்பை தடுப்பது அவசியம்ஆக்கிரமிப்பு கடை அதிரடி அகற்றம்... ஆற்றோரத்தில் அபாயம்! பேரிடர் பாதிப்பை தடுப்பது அவசியம்
ஆக்கிரமிப்பு கடை அதிரடி அகற்றம்... ஆற்றோரத்தில் அபாயம்! பேரிடர் பாதிப்பை தடுப்பது அவசியம்
ஆக்கிரமிப்பு கடை அதிரடி அகற்றம்... ஆற்றோரத்தில் அபாயம்! பேரிடர் பாதிப்பை தடுப்பது அவசியம்
ஆக்கிரமிப்பு கடை அதிரடி அகற்றம்... ஆற்றோரத்தில் அபாயம்! பேரிடர் பாதிப்பை தடுப்பது அவசியம்
ADDED : ஜூன் 07, 2024 12:26 AM

குன்னுார்;குன்னுார் ஆற்றோரத்தில் அபாயகரமான நிலையில் இருந்த, ஆக்கிரமிப்பு கடை நேற்று இடித்து அகற்றப்பட்டது.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த, 2019ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆற்றோர ஆக்கிரமிப்பில் இருந்த, 73 கடைகளில் 55 கடைகள் இடிக்க 'நோட்டீஸ்' வழங்கி, 44 கடைகள் அகற்றப்பட்டன. சிலர் தடை ஆணை பெற்றதால் மற்ற கடைகளை இடிப்பது கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே, 7 கடைகளை இடிக்க கடந்த மாதம் வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
எனினும் சிலர் தடையாணை பெற்றதாக கூறியதால் வருவாய் துறையினர் இடிப்பதை நிறுத்தினர்.
கடை நடத்த தடை
கடந்த, 31ம் தேதி 'கண்டிஷனல் அசைன்மென்டில்' இருந்த டீக்கடையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கியதால், கடை நடத்த வருவாய் துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், நேற்று கடந்த ஓராண்டிற்கு முன்பு ஒரு பகுதி இடிந்து விழுந்து அந்தரத்தில் இருந்த பேக்கரி கட்டடத்தை நேற்று தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் வருவாய் துறையினர், பொக்லின் உதவியுடன் இடித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இங்குள்ள சில கடையை நடத்துபவர்கள் தடையாணை பெற்றுள்ளனர். அதன் கால அவகாசம் முடிந்ததும் மற்ற கடைகள் இடிக்கப்படும்,' என்றனர்.
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மழை காலங்களில் பேரிடர் ஏற்பட்டு வருகிறது. அதில், ஆற்றோர பகுதிகள் பாதுகாப்பின்றி உள்ள கட்டட பகுதிகளில், பேரிடர் ஏற்பட்டால் உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஏற்கனவே, குன்னுாரில் ஆங்கிலேயர் காலத்தில அமைக்கப்பட்ட மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழை நீர் தடம் மாறி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டு, இப்பகுதியில் டீக்கடை அந்தரத்தில் தொங்கிய போது, மக்கள் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.
எனவே, குன்னுார் ஆற்றோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் எளிதாக செல்லும் வகையில், கால்வாய் அடைப்பை நீக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.