/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சிறுத்தை அருகே செல்பி: வனத்துறை விசாரணை சிறுத்தை அருகே செல்பி: வனத்துறை விசாரணை
சிறுத்தை அருகே செல்பி: வனத்துறை விசாரணை
சிறுத்தை அருகே செல்பி: வனத்துறை விசாரணை
சிறுத்தை அருகே செல்பி: வனத்துறை விசாரணை
ADDED : ஜூன் 07, 2024 12:24 AM

கூடலுார்:'கூடலுார் பொன்வயல், குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை அருகே நின்று, 'செல்பி' வீடியோ எடுத்து, வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலுார், தேவர்சோலை அருகே, பொன்வயல் கிராமத்தில் சுனில் என்பவன் வீட்டின் அருகே, இரு தினங்களுக்கு முன் சிறுத்தை பதுங்கி இருந்ததை மக்கள் பார்த்துள்ளனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ள பொன்வயல், பாலம்வயல் உள்ளிட்ட பகுதிகளில், வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடைய அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளான நேற்று, சிறுத்தையை தேடும் பணிகளை கூடலுார் உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆய்வு செய்து, வன ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறுத்தை அருகே சென்று 'செல்பி' வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார் உதவி வன பாதுகாவலர் கருப்பையா கூறுகையில், ''வனவிலங்குகள் அருகே சென்று வீடியோ; செல்பி எடுப்பது ஆபத்தான செயலாகும். ஆபத்தை உணராது சிறுத்தை அருகே வீடியோ எடுத்து வெளியிட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.