Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பகவதி கோவில் திருவிழா பழங்குடியினர் பரவசம்

பகவதி கோவில் திருவிழா பழங்குடியினர் பரவசம்

பகவதி கோவில் திருவிழா பழங்குடியினர் பரவசம்

பகவதி கோவில் திருவிழா பழங்குடியினர் பரவசம்

ADDED : ஜூன் 07, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
பந்தலுார்:பந்தலுார் பொன்னானி பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பழங்குடியினர் பங்கேற்று வழிபட்டனர்.

பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. பொன்னானி, அம்பலபாடி, சர்க்கரைகுளம், குன்றில்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் இணைந்து நடத்திய திருவிழாவில், விரதம் இருந்த பக்தர்கள், தங்கள் குலதெய்வ வீட்டில் இருந்து சாமியாட தேவையான வாள், பிரம்புகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பூஜை பொருட்களை, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

மரங்களுக்கு மத்தியில் இருந்த கோவில் சுத்தம் செய்யப்பட்டு, அரிசி, சந்தனம் சேர்த்து அரைக்கப்பட்டு, நீராடிய பின்னர் அதனை சாமியாடும் நபர்களுக்கு உடலில் பூசி, குங்குமம் வைத்து அலங்காரம் செய்தனர்.

பின்னர் வன தேவதைகளை வணங்கி, பக்தியுடன் சாமியாடி, தேங்காய் உடைத்து குறி சொல்லி, பக்தர்களுக்கு அரிசியை பிரசாதமாக வழங்கினர். அப்போது பக்தர்கள் தங்களின் குறைகளை தீர்த்து வைக்கவும், கிராமங்களின் பிரச்னைகளையும் தீர்க்கவும் தெய்வம் துணை நிற்க வேண்டுமென தெரிவித்தனர். தொடர்ந்து தீர்த்தம் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நெல் வறுக்கப்பட்டு, பழங்குடியின பெண்கள் இணைந்து அவல் ஆக மாற்றி சாமிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்கினர்.

திருவிழா மற்றும் பூஜைகளில் பழங்குடியின மக்கள் மட்டும் இன்றி, வயநாடு செட்டி சமுதாய மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பகவதியின் அருள் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை வேலன், விஜயன், செங்குட்டவன், ராஜன், வாசு, மணிவேலன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us