/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆர்வமிருந்தால் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்கலாம்ஆர்வமிருந்தால் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்கலாம்
ஆர்வமிருந்தால் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்கலாம்
ஆர்வமிருந்தால் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்கலாம்
ஆர்வமிருந்தால் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்கலாம்
ADDED : ஜன 07, 2024 11:31 PM
ஊட்டி;பள்ளி மாணவர்கள் அறிவுத்திறன் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா அறிக்கை; தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 9, 10ம் தேதிகளில், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலைக் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படுகிறது.
போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள், தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்தும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரை கடிதம் பெற வேண்டும்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம், 7 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும்.
சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் இருந்து பெறப்படும் தலைப்புகள், போட்டி தொடங்குவதற்கு முன்னர், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். இப்போட்டிகளில், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.