அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா
அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா
அரசு விழா: 421 பயனாளிகளுக்கு பட்டா
ADDED : ஜன 10, 2024 10:34 PM
கூடலுார் : கூடலுாரில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், மறைந்த முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச பட்டா, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
ஆர்.டி.ஓ., முகமது குதரத்துல்லா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசினார். விழாவில், நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில், ''மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட, ரேஷன் கடையின் மூலம், 1000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. கூடலுார் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
அரசு அதிகாரிகள் அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, முதல்வர் உத்தரவை தொடர்ந்து தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது,'' என்றார்.
தொடர்ந்து, 421 பயனாளிகளுக்கு பட்டாவும்; 657 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் கீதா, நகராட்சி தலைவர் பரிமளா உட்பட பலர் பங்கேற்றனர். பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.