Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

பந்தலுாரில் தொடரும் பருவ மழையால்... அந்தரத்தில் தொங்கும் வீடுகள்!உள்ளூர் முகாம்களில் தஞ்சமடைந்த மக்கள்

ADDED : ஜூலை 03, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
பந்தலுார்:பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, கூவச்சோலை கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டு, குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கு வதால், மக்கள் வீடுகளை காலி செய்து முகாமில் தஞ்சம் அடைந்தனர்.

பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. திடீரென கனமழை பெய்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆற்று வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து குடியிருப்புகள், விவசாய தோட்டங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

கால்வாய் மூடப்பட்டதால் பாதிப்பு


இந்நிலையில், நெலாக்கோட்டை அருகே கூடலுார் செல்லும் நெடுஞ்சாலையின் கீழ் பகுதியில் கூவச்சோலை கிராம குடியிருப்புகள் அமைந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மழை நீர் வழிந்து ஓட ஏதுவாக சாலையின் குறுக்கே இங்கு அமைக்கப்பட்டிருந்த, கால்வாய்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மூடப்பட்டது. இதனால், மழை வெள்ளம் குடியிருப்புகள் மற்றும் சாலையை ஒட்டிய விரிசலான பகுதிகளில் புகுந்து மண் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்பு சுவர்கள் கட்டினாலும், மழை காலத்தில் பெருக்கெடுக்கும் தண்ணீர் வழிந்தோட வழி இல்லாத நிலையில், இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவது தொடர்கிறது.

வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்


இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அதில், நான்கு வீடுகள் முன் மற்றும் பின் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்குகிறது. சில வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது விழும் என்று தெரியாமல் உள்ளது.

இதனால், இந்த பகுதியை சேர்ந்த, 62 பேர் வீடுகளை விட்டு வெளியேறி, வருவாய் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மாணவர்கள் பாதிப்பு


---இதனால், இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்ல முடியாததுடன், மாணவர்களும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் முதலில் மழை நீர் வழிந்தோட ஏற்கனவே இருந்த கால்வாய்களை மீண்டும் சுத்திகரிப்பு செய்து திறந்து, தண்ணீர் கீழ்நோக்கி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். மாறாக மண் சரிவு ஏற்படுவதாக கூறி, எங்களை வேறு பகுதிக்கு இடம்பெற கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, இப்பகுதியில் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.

--இந்நிலையில், கூடலுாரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலை இங்கு அமைந்துள்ள நிலையில், குடியிருப்பில் ஒட்டிய பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் சாலையில் பிளவு அதிகரித்து சாலை துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் உரிய ஆய்வு செய்து, மக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us