/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு
யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு
யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு
யானை பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை கும்கிகள் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்க முடிவு
ADDED : ஜூலை 03, 2024 02:18 AM

கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள், முகாமிட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்த நிலையில், முதுமலையிலிருந்து, இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், யானை பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், கோரிக்கையை வலியுறுத்தி, மாக்கமூலா பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அங்குள்ள மைதானத்தில் தற்காலிக குடில் அமைத்தனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை.
தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி., தங்கவேல், டி.எஸ்.பி.,கள் வசந்தகுமார், சரவணன் தலைமையில் போலீசார், மாக்கமூலா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கூடலுார் டி.எப்.ஓ., அலுவலகத்தில் டி.எப்.ஓ.,வெங்கடேஷ் பிரபு தலைமையில், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, டி.எஸ்.பி.,கள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதில்,'மக்களை அச்சுறுத்திவரும் காட்டு யானை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
முடிவில், 'கூடுதல் வன ஊழியர்கள் நியமித்து, கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என, டி.எப்.ஓ., உறுதியளித்தார். அதனை மக்கள் ஏற்று கொண்டு கலைந்து சென்றனர்.